News
தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி!
தற்போது மக்கள் மனதில் அதிகமாக பேசப்படும் வார்த்தை என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம். அந்த படி சில தினங்களாக கொரோனாவின் பேச்சை மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வந்தது, ஆனால் தற்போது இந்தியாவில் இந்த கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது மேலும் பல மாநிலங்களில் அம்மாநில அரசு முழு ஊரடங்கு இணை வாபஸ் பெற்றுள்ளது. மேலும் நம் தமிழகத்திலும் ஊரடங்கும் பல்வேறு வற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா என்று புதிதாக நோய் பரவ உள்ளதாக கூறப்படுகிறது. அவை இந்தியாவில் தற்போது 40 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மகாராஷ்டிரா மத்தியபிரதேசம் கேரளாவில் இந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது நம் தமிழகத்திலும் இந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பானது வர தொடங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் ஒருவருக்கு இந்த டெல்டா பிளஸ் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். டெல்டா பிளஸ் கொரோனா தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் மாநிலங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அவர் சென்னையை சேர்ந்தவர என ஆய்வு செய்து வருகிறோம் என்றும் கூறப்படுகிறது.
