சுவையான சேப்பங்கிழங்கு மசாலா!!

9ed9fd6bb45cbe54e148295241a065dc

தேவையானவை:
சேப்பங்கிழங்கு – 500 கிராம்
வெங்காயம்- ½
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
கடுகு- கால் ஸ்பூன்
இஞ்சி- சிறு துண்டு
பூண்டு- 7 பல்
கறிவேப்பிலை- தேவையான அளவு
கொத்தமல்லி இலை- தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 
1.    சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையினைப் போட்டு தாளிக்கவும்.
3.    அடுத்து வெங்காயம், இஞ்சி- பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாயினைப் போட்டு வதக்கி அடுத்து சேப்பங்கிழங்கினைப் போட்டு வதக்கவும்.
4.    அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
5.    அடுத்து எண்ணெய் பிரியும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சேப்பங்கிழங்கு மசாலா ரெடி. 
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.