சுவை நிறைந்த இறால் குழம்பு!!

7f65f3f528529a5155c1e517104dd705-1

கடல் உணவுகள் எப்போதும் எவ்வித உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தாத ஒரு உணவு வகையாகும். அந்த வகையில் இப்போது இறால் குழம்பினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
இறால் – 250 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
தேங்காய் பால் – 1/4 கப்
இஞ்சி- 1
பூண்டு – 2
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தனியாத் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
1.    இறாலை சுத்தம் செய்து உப்பு சேர்த்து அலசிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
3.    அடுத்து வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
4.    அடுத்து மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள், உப்பு, இறால் சேர்த்து வேகவிடவும்.
5.    அடுத்து தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் இறால் குழம்பு ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews