ருசியான மட்டன் குடல் கிரேவி ரெசிப்பி!!

6f833604859e921d30557dc38f114731

மட்டன் குடலில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்து டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடும் வகையிலான சுவையான மட்டன் குடல் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையானவை :

மட்டன் குடல் – அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்,
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
சோம்பு- 1 ஸ்பூன்
கடுகு- ½ ஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1 ஸ்பூன்
உப்பு  – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு, 

செய்முறை :

1. மட்டன் குடலை சிறிது சிறிதாக நறுக்கி மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும். 
2. அடுத்து வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். குடல், இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஒரு விசில் விட்டு இறக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், சோம்பு மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கி மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
4. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து, அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் அரைத்த கலவையைப் போட்டு வதக்கவும்.
5. அடுத்து மிளகாய்த் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு, மட்டன் குடல் சேர்த்து தண்ணீர்விட்டு வேகவிட்டு கொத்தமல்லி இழை சேர்த்து இறக்கினால் மட்டன் குடல் கிரேவி ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews