சுவையான காளான் பிரியாணி!!

2460854323a82c916b948cc7aa06df5b-2

சைவப் பிரியர்கள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் உணவு வகையான காளானில் இப்போது பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
காளான் – கால் கிலோ 
வெங்காயம் – 4 
தக்காளி – 3
இஞ்சி- 1 துண்டு
பூண்டு- 1 
பட்டை- 4
பிரியாணி இலை – 5 
கிராம்பு- 5,
ஏலக்காய் – 5 
மிளகாய்த் தூள் – 11/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் 
மல்லித் தூள் – 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் – 5 
தயிர் – 1 டம்ளர் 
நெய் – 150 மில்லி அளவு 
எலுமிச்சை பழம் – 1 
கொத்தமல்லி தழை- கைப்பிடியளவு 
புதினா – கைப்பிடியளவு
எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை:
1.    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். காளானை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
3.    அடுத்து கொத்தமல்லி, புதினா இலை, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போட்டு வதக்கவும்.
4.    அடுத்து காளான், உப்பு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வேகவிட்டு, அரிசியைப் போட்டு அதனைவிட இரண்டு மடங்கு தண்ணீர்விட்டு வேக விடவும். 
5.    அடுத்து விசில் வரும்போது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு இறக்கினால் காளான் பிரியாணி ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.