சுவையான பிரெட் பொரியல் ரெசிப்பி!!

db5535115263af8d6548d6036b4a733d-1

பிரெட்டில் நாம் இப்போது சுவையான பொரியல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பாக்கலாம்.

தேவையானவை:
பிரெட் – 7
நெய் – தேவையான அளவு
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
பட்டை – 3
சோம்பு – ½ ஸ்பூன்
மல்லித் தூள் – 1 ஸ்பூன்

செய்முறை :
1. பிரெட்டை ஓரங்களை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து பச்சைமிளகாய், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
2. வாணலியில் நெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு தாளிக்கவும். அடுத்து தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்து வேகவிடவும்.
4. இறுதியாக அத்துடன் பிரெட் துண்டுகளை சேர்த்து லேசாக கிளறி  இறக்கினால் பிரெட் பொரியல் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.