சுவையான வாழைப் பூ கூட்டு ரெசிப்பி!!

31c90994bc36568aeab87aaee82a1009

பொதுவாக கூட்டு வகைகள் என்றாலே உருளைக் கிழங்கு, கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களில்தான் செய்வோம். இப்போது நாம் வித்தியாசமாக வாழைப்பூவில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்,

தேவையானவை:
வாழைப் பூ – 1
துவரம் பருப்பு – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
தேங்காய் – 4 துண்டு
பூண்டு – 1
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
கடுகு- சிறிதளவு,
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
 
1.    வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கி மோரில் ஊறவைத்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். 
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நன்கு வதக்கவும்.
3.    அடுத்து மிக்சியில் பூண்டு, சீரகம், சோம்பு, தேங்காய் துண்டுகள் சேர்த்து மைய அரைக்கவும்.
4.    அடுத்து அரைத்த கலவையுடன் வாழைப்பூ, பருப்பு சேர்த்து 1 விசில் விட்டு இறக்கி மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து ஒரு  கொதிவிட்டு இறக்கினால் வாழைப்பூ கூட்டு ரெடி.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews