மூச்சுத் திணறலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் டெல்லி! புதன்கிழமை மழை பெய்தால் தப்பிக்க வாய்ப்பு!!

கடந்த சில வருடங்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காணப்படுகிறது. இதனால் டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில மாதங்களுக்கு முன்பு டெல்லி மாநிலத்தில் கனரக வாகனங்கள் உள்ளே நுழைவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்திருந்தது.

அதுவும் குறிப்பாக தீபாவளியை ஒட்டி டெல்லியில் காற்று மாசுபாடு விகிதம் அதிகரிக்க தொடங்கியது. இவை தற்போது வரையும் அதிகமாக காணப்படுவதாக புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளது.

அதன்படி டெல்லியில் காற்றின் தரம் குறைந்து தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடிக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 280 ஆக உள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் 297 ஆக காற்றின் தரக் குறியீடு 280 ஆக உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் 200 ஆகவும் காற்று தரக்குறியீடு உள்ளது. புதன்கிழமை மழை பெய்தால் காற்றின் தரம் மேம்பாடு அடைய கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதனால் தலைநகர் டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையிலேயே காணப்படுவது தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment