காலவரையின்றி பள்ளிகள், கல்லூரிகளை மூட உத்தரவு!

காற்று மாசுபாடு காரணமாக ஏற்கனவே டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஒரு வாரத்துக்கு பள்ளி கல்லூரிகள் மூடப்படும் என உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் காலவரையின்றி மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது என்பதும் இதனால் சுப்ரீம் கோர்ட் கடுமையான உத்தரவு பிறப்பித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியது என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க தயார் என்றும் அறிவித்து இருந்த டெல்லி அரசு, தற்போது காலவரையின்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் ஊழியர்களும் பெரும்பாலானோர் வீட்டில் இருந்துதான் தற்போது பணி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காற்று மாசுபாட்டை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப என்றும் டெல்லி அரசு உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment