Connect with us

டெல்லி வெள்ளத்தில் இடிந்து விழும் வீடுகள்: அதிர்ச்சி வீடியோ

News

டெல்லி வெள்ளத்தில் இடிந்து விழும் வீடுகள்: அதிர்ச்சி வீடியோ

23b2dcbe70a5133c79bd40c75a33068e-1

டெல்லியில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாகியுள்ள நிலையில் தற்போது டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் டெல்லியின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலைய்லி டெல்லியில் உள்ள வீடுகளை வெள்ள நீர் அடித்து கொண்டு செல்வது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

டெல்லியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஐடிஓ மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே கனமழை காரணமாக கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் அங்குள்ள ஒருசில வீடுகள் அரிந்து வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்து செல்லப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஒருசில நொடிகளில் அங்கிருந்த வீடுகள் காணாமல் போனதை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து டெல்லி அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். வீடுகளை வெள்ளம் அடித்து சென்ற சம்பவத்தால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top