மெட்ரோ ரயிலில் அவ்வப்போது ஆச்சரியமான சம்பவங்கள் நடைபெறும் என்பதும் சமீபத்தில் கூட ஒரு பெண் டெல்லி மெட்ரோ ரயில் கிட்டத்தட்ட உள்ளாடை மட்டுமே அணிந்து பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் அதே டெல்லி மெட்ரோ ரயிலில் இரண்டு இளைஞர்கள் பாவாடை மற்றும் டி-ஷர்ட் அணிந்து பயணம் செய்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நாகரிகம் வளர வளர ஆண்கள் உடையை பெண்களும் பெண்களுடைய ஆண்களும் அணிந்து வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் உடையான ஜீன்ஸ் டி-ஷர்ட் ஆகியவற்றை தற்போது பெண்கள் சர்வ சாதாரணமாக அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் வகையில் டெல்லி மெட்ரோ ரயிலில் இரண்டு இளைஞர்கள் பாவாடை மற்றும் டீ சர்ட் அணிந்து வந்தது பரபரப்பு ஏற்படுத்தியது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அந்த இரண்டு இளைஞர்களை ஆச்சரியமாக பார்த்தனர் என்பதும் அவர்கள் ஸ்டைலாக பெண்களின் உடை அணிந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது பரபரப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான பேர் காமெடியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். பிறர் தங்களை பார்க்க வேண்டும் தங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிலர் இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார்கள் என்றும் இருப்பினும் அவர்களது உடை நன்றாக தான் இருந்தது என்றும் அருவருக்கத்தக்க வகையில் அல்லது ஆபாசமாகவோ இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
video: https://www.instagram.com/p/CrFmYs_Ji4A/