Connect with us

டெல்லியில் சோகம்!! MBBS மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

தற்கொலை

செய்திகள்

டெல்லியில் சோகம்!! MBBS மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய சம்பவங்களை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை கொண்டு வந்த போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் மாணவிகள் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவி அதிகாலை 3.30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஹாஸ்டல் வார்டன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மாணவியின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஹாஸ்டல் விடுதியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top