முதல் பந்திலேயே விக்கெட்.. வாழ்வா? சாவா போட்டியில் சொதப்பும் டெல்லி..!

ஐபிஎல் போட்டியில் இன்று டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதி வரும் நிலையில் டெல்லி அணிக்கு இது வாழ்வா சாவா என்ற போட்டியாக இருக்கும் நிலையில் முதல் பந்தலையே விக்கெட்டை இழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் தொடரை 44வது போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரரான சால்ட் மற்றும் கார்க் ஆகிய இருவரும் களத்தில் இறங்கிய நிலையில் முதல் பந்தலையே சால்ட் அவுட் ஆனார். ஷமி வீசிய அபாரமான அந்த பந்தில் விக்கெட் விழுந்தது டெல்லி அணி வீரர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

dc vs gt
டெல்லி அணி தற்போது 8 போட்டிகளில் விளையாடி ஆறு தோல்வி மற்றும் இரண்டு வெற்றி மட்டுமே பெற்று நான்கு புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிடும் என்பதும் அதனால் இந்த போட்டி அந்த அணிக்கு வாழ்வா சாவா போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு முக்கியமான போட்டியில் டெல்லி அணி முதல் பந்திலேயே விக்கெட் இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் அணியை பொறுத்தவரை அந்த அணி எட்டு போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றியை பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் விளையாடும் டெல்லி மற்றும் குஜராத் அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:

டெல்லி: டேவிட் வார்னர், சால்ட், மனிஷ் பாண்டே, ரிலே ரோஸ்ஸோ, பிரியம் கார்க், ரிபல் பட்டேல், அக்சர் படேல், அமன் கான், குல்தீப் யாதவ், நார்ட்ஜி, இஷாந்த் சர்மா

குஜராத்: சாஹா, அபினவ் மனோகர், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவெட்டியா, ரஷித் கான், நூர் அகமது, ஷமி, மொஹித் ஷர்மா, ஜோஷ் லிட்டில்,

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.