#Breaking சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த முதளிதர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள முரளிதர் என்பவரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட முரளிதர், 1984ம் ஆண்டு சென்னையில் வழக்கறிஞராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். 3 ஆண்டுகளுக்கு பின்னர் 1987ல் இருந்து டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற தொடங்கினார்.

2006ம் ஆண்டு, முரளிதர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதியாக இருந்த காலத்தில், ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமையை உறுதிப்படுத்தி ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு வெளியாக காரணமாக இருந்தார்.

1984-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை முன்னின்று நடத்திய காங்கிரங்ஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாரை குற்றவாளி என்று கூறி சிறையிலடைத்தார். உத்தரபிரதேசத்தில் 1987-ம் ஆண்டு 40 இஸ்லாமிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையினருக்கு தண்டனையை உறுதி செய்தது என பல சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment