கணவனிடமிருந்தே பிரிந்த பெண்ணின் குழந்தையின் பாஸ்போர்ட்டில் குழந்தையின் தந்தை பெயரை நீக்க தாய்க்கு உரிமை உண்டு என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக பாஸ்போட்டில் தந்தை பெயர் இருப்பது கட்டாயமாக்கப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் டெல்லி சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கணவர் தன்னையும் தனது குழந்தையும் விட்டு சென்று விட்டதை அடுத்து தனது மைனர் குழந்தையின் பாஸ்போட்டில் தந்தையின் பெயர் இருப்பதை தான் விரும்பவில்லை என்றும் எனவே தந்தையின் பெயரை நீக்கம் செய்து தனது குழந்தைக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கணவனிடம் இருந்து பிரிந்த சிங்கிள் தாயின் கோரிக்கை ஏற்றுக் கொள்வதாகவும் தந்தையின் பெயர் இல்லாமல் அந்த பெண்ணின் குழந்தைக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
ஒரு சில சூழ்நிலைகளில் தந்தையின் பெயரை பாஸ்போர்ட்டில் இருந்து நீக்கலாம் என்றும் குடும்ப பெயராக மாற்றலாம் என்றும் டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு அந்த பெண்ணிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
பெற்றோருக்கு இடையே திருமண முரண்பாடுகள் ஏற்பட்டால் குழந்தையின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலனை செய்யும்போது தாயின் விருப்பத்தை கேட்க வேண்டும் என்றும் தாய் ஒப்புக்கொண்டால் மட்டுமே தந்தையின் பெயரை பதிவு செய்யலாம் என்றும் இல்லையென்றால் தாயின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பாஸ்போட்டில் தந்தையின் பெயரை நீக்க வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு வெற்றி கிடைத்துள்ளசெய்தி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.