டெல்லி தீ விபத்து: தமிழக முதல்வர் இரங்கல் !!

டெல்லியில் வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட நபர்கள் உயர்ந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில் 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக கட்டிடத்திலிருந்து வேகமாக பரவிய தீயால் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கட்டிடத்தில் இருந்தது குதித்தது காண்போரை கலங்க வைத்தது

இந்நிலையில்  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் டெல்லி தீ விபத்தில் 25- க்கும் மேற்பட்டவர்கள் பலர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment