குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி பெரும் அணிகள்.. ஐபிஎல் போட்டிகளில் கூடும் சுவாரஸ்யம்..!

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடித்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தோல்வி அடைந்து வரும் நிலையில் குறைவான ஸ்கோர் அடித்த பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பெங்களூர் அணி வெறும் 126 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆனால் எதிரணியான லக்னோ அணியை 108 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்றது. அதேபோல் நேற்று டெல்லி அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் குஜராத் அணி மிக எளிதில் வெற்றி பெற்று விடும் என வர்ணனையாளர்கள் கூறினர். ஆனால் களத்தில் நடந்ததோ வேறு. டெல்லி அணி பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் குஜராத் அணியின் 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

aman khanடெல்லி அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களுமே நேற்று சிறப்பாக பந்துவீசினர் என்பதும் குறிப்பாக இஷாந்த் சர்மா கடைசி ஓவரை மிக அருமையாக வீசி தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்த ஸ்கோர் அடித்து அணிகள் வெற்றி பெறுவதால் போட்டியின் சுவாரஸ்யம் அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

130 ரன்கள் டெல்லி அணி எடுத்தது என்றவுடன் டெல்லி அணி ரசிகர்களுக்கே ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் டெல்லி அணி நேற்று வெற்றி பெற்றதை அடுத்து குஜராத் வீழ்த்த முடியாத அணி இல்லை என்பதை கடைசி இடத்தில் உள்ள டெல்லி நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் டெல்லி அணி 23 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டை இழந்து தத்தளித்து கொண்டிருந்தது. ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட்டுகளை இழந்து மிகவும் குறைவான ஸ்கோர் அடித்தது டெல்லி அணி தான் என்ற மோசமான சாதனையும் அந்த அணிக்கு கிடைத்தது. ஆனால் இறுதியில் அந்த அணிக்கு தான் வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ஐபிஎல் போட்டி குறைவான ரன்கள் எடுத்தாலும் அதிக ரன்கள் எடுத்தாலும் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயித்து சொல்ல முடியாது என்பதை கடந்த இரண்டு போட்டிகள் உணர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...