டெல்லியில் பயங்கரம்! 17-வயது சிறுமி முகத்தில் ஆசீட் வீச்சு!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் துவாரகா பகுதியில் 17 -வயது பெண் முகத்தில் ஆசீட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

டெல்லி மாநிலம் துவாரகா நகரில் 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தங்கையுடன் காலை 9 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து சிறுமியை வழிமறித்து உள்ளனர்.

சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்! பழனியில் வியாபாரிகள் போராட்டம்..!!

பின்னர் தான் மறைந்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து மாணவி மீது வீசியுள்ளனர். இதில் சிறுமி அலறிய படி துடிதுடித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை துணை ஆணையர் எம் ஹர்ஷ வர்தன் கூறுகையில் மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார்.

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி..!!

அதோடு சம்பவத்தில் ஈடுப்பட்ட யார் என்பது தெரியவில்லை என கூறினார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு நடத்தியதில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், மற்றொருவரை தேடும் பணியானது தீவிரமாக நடைப்பெற்று வருவதாக டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.