Connect with us

காலை உணவுத்திட்ட விழாவில் தாமதம்: கலெக்டர் அதிரடி உத்தரவு!!

food day reuters story 647 101617030735

தமிழகம்

காலை உணவுத்திட்ட விழாவில் தாமதம்: கலெக்டர் அதிரடி உத்தரவு!!

மயிலாடுதுறை அருகே தாமதமாக காலை உணவு வழங்கிய தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூர் பகுதியில் இருக்கும் துவக்கப்பள்ளியில் நடைப்பெற்ற காலை உணவு துவக்க விழாவில் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளின் வருகைக்காக மாணவர்களை காலை 9.45 மணி வரையில் காத்திருக்க வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அரசு நிர்ணயித்த கால அளவை தாண்டி தாமதமாக உணவு வழங்க காரணமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் குருபிரியாவை தற்காலிக பணி நீக்கம் செய்வதாக தகவல் வெளியானது.

ஆனால் பணியிடை நீக்கம் செய்யவில்லை என கூறப்பட்டதால் தலைமை ஆசிரியர், நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top