காலேஜ் முடிச்ச ஆறு மாதத்தில் டிகிரி கொடுக்க வேண்டும்..!: யுஜிசி ஆணை
தற்போது ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நம் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து முடித்த மாணவர்களுக்கு தற்போதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை என்பதும் அவர்களுக்கு பட்டம் வழங்கப்படவில்லை என்பதும் வேதனையான ஒன்றாக காணப்படுகிறது.
இதனை போக்கும் வகையில் யுஜிசி ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மாணவர்கள் பட்டப் படிப்பை முடித்தால் ஆறுமாதத்தில் பட்டம் தர வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்த 180 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்க யுஜிசி ஆணையிட்டுள்ளது. 180 நாளில் பட்டம் வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்து உள்ளது.
பல்கலைக்கழகங்கள் பட்டங்களை தாமதமாக வழங்குவதாக மாணவர்கள் புகார் அளித்ததால் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. தாமதமாக பட்டங்களை வழங்குவது மாணவர்களின் வேலை வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று யுஜிசி கூறியுள்ளது.
