கண்டிப்பாக 100% மாணவர்களுக்கு நேரடி வகுப்புதான்! கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் உள்ள மாணவர்கள் இன்னும் அதிக நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று எண்ணிய நிலையில் அவர்களுக்கு பேரதிர்ச்சி தரும் விதமாக பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
நேற்றைய தினம் தமிழக அரசும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கூறியிருந்தது. அதோடு மட்டுமில்லாமல் கல்லூரிகளும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் இது குறித்து சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளார். அதன்படி பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 100 சதவீத மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு முறையே பின்பற்றப்படும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் கூறியுள்ளார்.
100 சதவீதம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆணையர் கூறியுள்ளார். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
