அவதூறுவான பரப்புரைகளை எடப்பாடி பழனிசாமி கைவிட வேண்டும்!: அமைச்சர்

தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால் எதிர் கட்சியாக காணப்படுகின்றது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். பொதுவாக ஆளும் கட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் உன்னிப்பாகக் கவனித்து கேள்வி கேட்கும் உரிமையை எதிர்க் கட்சி பெற்றிருக்கும்.

அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாள்தோறும் திமுக கட்சியின் செயல்பாடு குறித்து விமர்சனம் செய்து கொண்டு வருவார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவதூறுவான பரப்புரைகளை கைவிட வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

தங்கம் தென்னரசு

அதன்படி அவதூறுவான பரப்புரைகளை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தமிழ் நாட்டு மண்ணின் சமூகநீதி உணர்வினை எடப்பாடி பழனிசாமி கொஞ்சமாவது பெற்றிட வேண்டும் என்றும் அவர் கூறினார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வஞ்சித்தனர் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment