டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதில் தீபக் சஹார்?

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் அதில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரை ஐபிஎல் போட்டிகளில் பந்து வீசவில்லை. உலககோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பந்து வீச முடியாது என்று கருதப்படுகிறது. இதனை அடுத்து அதற்கு பதிலாக ஒரு பந்து வீச்சாளரை தேர்வுசெய்யவும் இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றம் செய்ய அக்டோபர் 15-ஆம் தேதி கடைசி தேதி என்பதால் அதற்குள் தீபக் சஹர் அல்லது ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவரில் ஒருவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

சமீபகாலங்களில் தீபக் சஹர் மற்றும் ஷர்தூல் தக்கூர் ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டிகளில் நல்ல பந்து வீச்சை வெளிப்படுத்தினர் என்பதும் குறிப்பாக ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஜொலித்தர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இருவரில் யார் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.