Connect with us

“ஆளில்லா ரயில்வே கேட் பாலத்தில் ஆழமாக தண்ணீர் தேக்கம்” அரசு மருத்துவர் உயிரிழப்பு!!

News

“ஆளில்லா ரயில்வே கேட் பாலத்தில் ஆழமாக தண்ணீர் தேக்கம்” அரசு மருத்துவர் உயிரிழப்பு!!

55389a8600c62c350372162889358ea8

தற்போது நம் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் பல பகுதிகளில் நீரானது வெள்ளப்பெருக்கு போல வீடுகளில் செல்வது தெரிகிறது. இந்நிலையில் சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து கொண்டு வருகிறது.இதனால் அங்கு மழைநீர் தேக்கம் ஆனது அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடையூர் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்று உள்ளது. மேலும் அங்கு பெய்த கனமழையால் ரயில்வேகேட் பாலத்திற்குள் தண்ணீரானது குளம்போல தேங்கி உள்ளது.639396ecf43ad93aa7b70564baed089d

இந்த நிலையில் மழை பெய்யும் நேரங்களில் சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி அதை பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் அங்கு காணப்படுகிறது. மழை பெய்யும் நேரங்களில் சுரங்கப்பாதையில் அதிகளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் மாற்றுப்பாதை கோரி பொதுமக்கள் பல முறை போராட்டங்கள் நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வழக்கம்போல தொடையூர் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் அதிக அளவு தேங்கியுள்ளது. மேலும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்நிலையில் ஓசூரில் இருந்து அரசு மருத்துவராகப் பணியாற்றும் சத்யா அந்த பகுதிக்கு காரில் சென்றுள்ளார். மேலும் அவருடைய மாமியார் ஜெயா ஆகிய இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இரவு 8 மணி அளவில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் ரயில்வே சுரங்க பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை கணிக்க இயலாமல் மருத்துவர் காரை செலுத்தியுள்ளார்.

இதனால் கார் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி உள்ளது. மேலும் ஷீட்பெட் அணிந்திருந்த சத்யாவால்  காரில் இருந்து வெளியேற முடியவில்லை என்று கூறப்படுகிறது அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக சுதாரித்து கார் கதவை உடைத்து மருத்துவரையும் நீரில் தத்தளித்த மாமியாரையும் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்ற நிலையில் சத்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாமியார் ஜெயா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார் நீர் சுரங்க பாதைக்கு மாற்று ஏற்பாடு செய்யவும் ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மறியல் செய்து வருகின்றனர்.

மேலும் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top