மீண்டும் ஒரு ஆபத்து: நாளையதினம் வட தமிழ்நாட்டை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நகரும்!

சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை கடற்கரையில் கடந்து சென்றது. இதனால் சென்னையில் சில நாட்களாக பெய்த அடைமழை சற்று குறைய தொடங்கியது.

காற்றழுத்த தாழ்வு

இருப்பினும் தற்போது புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இவை வட தமிழ்நாட்டை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நகரும் என்று கூறப்படுகிறது.

அதன்படி வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வு நாளையதினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என்றும் கூறியுள்ளது.

மழை

இதனால் நவம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நவம்பர் 19ம் தேதியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment