ஒரு காலத்தில் ஏதாவது ஒரு நகரத்துக்கு சென்ற உடன் அந்த பஸ் ஸ்டாண்டில் இறங்கினால் சுற்றிலும் ஆட்டோக்கள் எல்லாம் இருக்க மாட்டார்கள் இந்த 20 ஆண்டு காலத்தில்தான் ஆட்டோக்கள் வளர்ச்சி சிறு கிராமங்கள் வரை வந்து விட்டது.
ஆனால் 80கள் , 90கள் வரை பேருந்து நிலையத்தை விட்டு இறங்கினால் கூப்பிடுடா குதிரை வண்டிய என சொல்லும் அளவுக்கு குதிரை வண்டிக்காரர்கள் தான் பேருந்து நிலையத்தில் நிற்பார்கள். அதற்கடுத்தாற்போல் சைக்கிள் ரிக்ஷாக்கள் இருந்தன.
தற்போது எங்குமே இந்த குதிரை வண்டியையும், சைக்கிள் ரிக்சாக்களையும் பார்க்க முடியவில்லை. முன்பு குதிரை வண்டிக்காரரிடம் ஒரு 5 ரூபாயோ 6 ரூபாயோ கொடுத்தால் போதும் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு குதிரை வண்டியில் ஏற்றி சென்று இறக்கி விடுவர்.
எல்லா இடத்திலும் ஆட்டோவாகி விட்டது. குதிரை வண்டி, சைக்கிள் ரிக்ஷாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விட்டது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மட்டும் கோவிலுக்கு வருபவர்களை அழைத்து செல்பவர்களுக்கு இந்த குதிரை வண்டிகள் பயன்படுகிறது. தமிழ்நாட்டிலேயே பழனி நகரில் மட்டுமே குதிரை வண்டிகள் அழியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரத்திலும் ஒரு சில குதிரை வண்டிகள் ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்போது பெரும்பாலும் எல்லோரிடமும் கார் அல்லது பைக் இருக்கிறது இருந்தாலும் அந்நாளைய குதிரை வண்டி பயணம் போல் வராது என்பது குறிப்பிடத்தக்கது.