திமுகவை வீட்டுக்கு அனுப்ப முடிவு!! எடப்பாடி பழனிசாமி வீர சபதம்;

2011 முதல் 2021 வரை தமிழகத்தில் பத்தாண்டுகளாக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை செய்தது அதிமுக. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக சட்டப்பேரவையில் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி கொண்டு வருகிறார். கட்சிக்குள் இரு பிரிவுகளாக பல்வேறு விதமான குழப்பங்கள் இருந்தாலும் தொண்டர்களிடையே அதிமுக என்ற உணர்வு இன்று வரையும் தீவிரமாக உள்ளது என்றே கூறலாம்.

மேலும் அதிமுக தொண்டர்களிடமும் பல்வேறு விதமான அறிக்கைகளையும் வெளியிட்டு கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி மக்களுக்கும் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையானது அதிமுக உருவாவதற்கு முதன்மையான காரணமாக இருந்த டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்போம் என்று எடப்பாடி பழனிசாமி அவர் கூறியுள்ளார்.

கண் துஞ்சது களப்பணி ஆற்றி மீண்டும் அதிமுகவின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்குவோம் என்றும் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.