பீதியில் அதிமுக முக்கியப் புள்ளிகள்;; கோடநாடு வழக்கில் சேலம் இளங்கோவனிடம் விசாரிக்க முடிவு!!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான அதிமுக முன்னாள் அமைச்சர் சேலம் இளங்கோவனிடம் விசாரணை மேற்கொள்ள தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017- ஆம் ஆண்டு ஏப்ரல் 23- ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது . இதில் எஸ்டேட் காவலாளி கொல்லப்பட்டார். எஸ்டேட் கணிப் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களாக கருதப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017- ஆன் ஆண்டில் விபத்தி மரணம் அடைந்தார். மேலும் மற்றோரு குற்றவாளியான சையன் சாலை விபத்தில் உயிர் தப்பினாலும் அவருடைய மனைவி மற்றும் மகள்கள் மரணம் அடைந்தனர்.
இந்த மரணங்கள் மற்றும் கோடநாடு கொள்ளை சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி இடம் அண்மையில் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து எஸ்டேட் உரிமையாளர் என்ற முறையில் சசிகலாவிடம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
