தற்போது வரை நம் நாட்டில் இரண்டு விதமான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அந்த இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் சத்துக் குறைபாடு உள்ளோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துமாறு பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்தியாவில் இரண்டாவது தவணை தடுப்பூசி அதிக அளவில் செலுத்தப்படாத நிலையில் இஸ்ரேல் நாட்டில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முதலாவதாக இஸ்ரேல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு நாலாவது தவணை தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் நாலாவது தவணை தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலக நாடுகளே ஆச்சரியம் அடையும் வகையில் இரண்டு தடுப்பூசிகளை முன்கூட்டியே செலுத்தி முடித்த இஸ்ரேல் மக்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியினையும் போட்டு விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் தாமதிக்காமல் அனைவரும் உடனடியாக நான்காவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட் கேட்டுக்கொண்டுள்ளார்.