Connect with us

பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களை திறக்க முடிவு!

educational institutions

செய்திகள்

பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களை திறக்க முடிவு!

பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களை திறக்க முடிவு!

கடந்த இரண்டு மாதங்களாக கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா அதிகமாக பரவியது. இதனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் இரவு நேர மற்றும் முழு நேர ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தினர். இந்த நிலையில் மெல்ல மெல்ல இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.

இதனால் ஒவ்வொரு மாநில அரசும் பள்ளி கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்து வருகிறது. அதன்படி இன்றைய தினம் கர்நாடகாவில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இமாச்சல் பிரதேசத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் திறக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன்படி இமாச்சல பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களை திறக்க அமைச்சரவையில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திரையரங்குகள், உடற்பயிற்சிகளையும் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் திறக்க இமாச்சலப் பிரதேச அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top