
Tamil Nadu
நூல் விலை எதிரொலி; பின்னலாடைகளின் விலையை 15% உயர்த்த முடிவு !!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவசிய பொருட்களின் விலையினை தொடர்ந்து மற்ற விலை அதிரயாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக நூல்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நூல் விலை காரணமாக பின்னலாடை விலையும் 15% விழுக்காடு உயர்த்தி தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தென்னிந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை உற்பத்தி உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15% விழுக்காடு உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நூல் ஏற்றுமதி விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பருத்தி பதுக்குதல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
