கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!:மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;

டிசம்பர் மாதம் என்றாலே அதிக விடுமுறை உள்ள மாதமாக காணப்படுகிறது. அதோடு பண்டிகை மாதமாகவும் டிசம்பர் காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் கல்லூரிகள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். இவை பொது விடுமுறையாக இருந்தாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறைகளும் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் டிசம்பர் 20-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் உள்ள நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் டிசம்பர் 20-ம் தேதியை உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை ஈடுகட்டும் வகையில் ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் உத்தரவிட்டுள்ளார் கடலூர் மாவட்ட ஆட்சியர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment