Connect with us

சிவகார்த்திகேயனை தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் டாக்டர் பட நடிகர்….!

doctor release1

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனை தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் டாக்டர் பட நடிகர்….!

சிவகார்த்திகேயனை தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் டாக்டர் பட நடிகர்….!

கடந்தாண்டு நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் டாக்டர். இந்த படத்தில் பலர் நடித்திருந்தாலும் தனது டைமிங் காமெடி மூலம் அனைவரையும் ரசிக்க வைத்த ஒரே நபர் என்றால் அது ரெடின் கிங்ஸ்லி தான். காமெடி கிங் யோகி பாபுவையே தூக்கி சாப்பிட்ட ரெடின் கிங்ஸ்லி டாக்டர் படத்திற்கு பின்னர் மிகவும் பிரபலமாகி விட்டார்.

ரெடின் கிங்ஸ்லி

தற்போது விஜய்யின் பீஸ்ட் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளாராம். அதன்படி பிரபல தமிழ் இயக்குனர் லிங்குசாமி தற்போது தெலுங்கில் இயக்கி வரும் படத்தில் தான் ரெடின் கிங்ஸ்லி அறிமுகமாக உள்ளாராம்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் இயக்கி வரும் படத்திற்கு தி வாரியர் என தலைப்பு வைத்துள்ளனர். நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி, ஆதி பினிசெட்டி, அக்ஷரா கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வழக்கமான போலீஸ் சப்ஜெக்ட் படமாக அல்லாமல் சற்று வித்தியாசமான கோணத்தில் உருவாகி வரும் தி வாரியர் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது தமிழில் வளர்ந்து வரும் காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படம் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமே ரெடின் கிங்ஸ்லி மார்க்கெட் வேற லெவல்ல இருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top