தூத்துக்குடியில் நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து கோல்டு லோன்!

தற்போது நம் தமிழகத்தில் பல பகுதிகளில் விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இவை பல விவசாயிகள், நடுத்தரக் குடும்பத்தினர் பலருக்கு பிரயோஜனமாக அமைந்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே இந்த நகை கடன் தள்ளுபடிலும் கூட மோசடி நடைபெற்று வருவதாக காணப்படுகிறது.பெரியசாமி

இது குறித்து தமிழகத்தின் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் இதுவரை கூட்டுறவு வங்கியில் ரூபாய் 15 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் இந்த மோசடி நடந்துள்ளது என்றும் ஐ .பெரியசாமி கூறினார். பலரும் போலி நகைகளை அடகு வைத்து கூட்டுறவு வங்கிகளில் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது என்று அமைச்சர் பெரியசாமி கூறினார்.

தூத்துக்குடியில் நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். இதனால் பல கூட்டுறவு  வங்கிகளில் இவ்வாறு ஏமாற்று வேலைகள் நடந்தது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் பல கூட்டுறவு  வங்கிகளில் 15 கோடி ரூபாய்க்கும் மேலே மோசடி நடந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment