கடனால் தவிப்போர்-செல்வ வளம் வேண்டுவோர் இவரிடம் தொடர்ந்து செல்லுங்கள்

பைரவ அவதாரங்கள் பல காலபைரவர்,உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர் வரிசையில் செல்வத்தை தரும் சொர்ணபைரவரும் வருகிறார். சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்தாலும் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு செளந்தர்ராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.

பொதுவாக பெருமாள் கோவில் சென்றால் செல்வ வளமும் சிவன் கோவில் சென்றால் அளவு கடந்த ஞானமும் பக்தியும் ஏற்படும் என்பது பொதுமக்கள் நம்பிக்கை. அதன் அடிப்படையில் பெருமாள் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் அதிக கூட்டம் செல்கிறது. ஏற்கனவே பெருமாள் செல்வ வளம் தருபவர் அவரோடு சேர்ந்து செல்வ வளம் தரும் பைரவரும் இருந்தால் மக்கள் கூட்டம் செல்லாமல் இருக்குமா? அப்படித்தான் தாடிக்கொம்பு செளந்தர்ராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமிக்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பெருமாள் கோவிலில் பைரவர் இருப்பது இங்கு மட்டும்தான். பெரும்பாலான பெருமாள் கோவில்களில் பைரவரை பார்க்க முடியாது. சிவன் கோவில் மற்றும் முருகன் அம்மன் உள்ளிட்ட சைவ கோவில்களில் தான் பைரவரை பார்க்க முடியும். வைணவ கோவிலில் பைரவர் இருக்கிறார் என்றால் அது இங்கு மட்டும்தான். இவர் சொர்ணம் எனப்படும் தங்கத்தை கொடுக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆக விளங்குகிறார்.

பக்கத்து ஊரான கரூர், திருப்பூர் உள்ளிட்ட மிகப்பெரும் ஜவுளி ஆலை அதிபர்கள் எல்லாம் இந்த பைரவரை ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமிக்கும் தொடர்ந்து சென்று வணங்கி தொழிலில் அதிக மன நிறைவை பெறுகின்றனர்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமிக்கும் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சென்று சொர்ண ஆகர்ஷ்ண பைரவரை வணங்கினால் கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.

பல தொழில் அதிபர்கள் இந்த கோவிலுக்கு தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இங்கு மட்டுமல்ல திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி உள்ளது.

இன்று மஹா பைரவாஷ்டமி என்று சொல்லக்கூடிய பைரவர் தோன்றிய நாள். சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதியில் இன்று வழிபட ஆரம்பித்து ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமிக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு வாருங்கள் வாழ்வு செழிக்கும். முக்கியமாக கடன் பிரச்சினை பெருமளவு குறையும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews