சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது இன்று விவாதம்….! எதிர்க்கட்சி என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தான் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் இரண்டாவது முறையாக தமிழகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்தார். சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்றைய தினம் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

அதன்படி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது. மார்ச் 24-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் இன்று விவாதம் நடக்கிறது.

இந்த விவாதத்தில் எதிர் கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பட்ஜெட் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேளாண் பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்ட பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் குற்றச்சாட்டை வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment