
Tamil Nadu
சட்டப்பேரவையில் இன்று; போக்குவரத்துத் மற்றும் சுற்றுலாத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்!!
போக்குவரத்துத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் வினாக்கள் கேட்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் 2022- ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் திருத்த சட்டம் முன்வடிவு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் பதிலளிப்பார் என தெரிகிறது.
மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் வெளியிடுட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
