
Tamil Nadu
விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம்-9 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை..!!
நம் தமிழகத்தில் பல காவல் நிலையத்தில் விசாரணை கைதிகள் மரணம் அடைகிறார்கள். இதனால் டிஜிபி சைலேந்திரபாபு விசாரணைக் கைதிகளை மாலை நேரத்திற்கு மேல் காவல் நிலையங்களில் வைத்து இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
ஏனென்றால் சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் தாக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்ததாக தெரிகிறது. அதன் பின்பு அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யும் போது தலையில் ஒரு அங்குலம் அளவிற்கு காயம் இருந்ததாக, கால் எலும்பு முறிந்து உள்ளதாகவும், லத்தியால் தாக்கியதற்கான தடம் இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இது தொடர்பாக தற்போது 9 போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த தொடர்பாக 9 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது.
சம்மனை அடுத்த தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் இடம் விசாரணை நடக்கிறது. காவல் ஆய்வாளர் செந்தில்குமார், SI புகழும் பெருமாள், கணபதி காவலர்கள் பவுன்ராஜ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
