நம் நாட்டில் அரிதான சில வழக்குகளுக்கு மட்டுமே தண்டனைகளில் உச்சமான மரண தண்டனை வழங்கப்படுகிறது. அதிலும் குற்றவாளிகளுக்கு வலிவில்லாமல் மரண தண்டனை நிறைவேற்றுக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தொடரப்பட்ட்து , இந்த வழக்கு ஜூலை மாதத்திற்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்ற கைதிகள் தூக்கில் இடப்படும் முறை மாற்ற வேண்டும். மேலும் வலியற்ற முறையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் கோரி வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தூக்கு தண்டனையை நிறைவேற்றும் போது உயிர் பிரிவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் உள்ளிட்ட அளவீடுகள் ரீதியான தரவுகள் தேவை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நள்ளிரவில் திடீரென திரண்ட பொதுமக்கள்.. போலீஸ் தடி அடி
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.