Connect with us

‘அப்பாகூடவே போறோம்’ தந்தையின் இறப்பை தாங்க முடியாமல் மகனும், அம்மாவும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்

156511 death1

தமிழகம்

‘அப்பாகூடவே போறோம்’ தந்தையின் இறப்பை தாங்க முடியாமல் மகனும், அம்மாவும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்

சாத்தூரில் கணவர் இறந்த 30வது நாளில் அவரின் இறப்பை தாங்க முடியாமல் மனைவி மகன் இருவரும் தந்தையைத் தேடி செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு  விஷமருந்தி தற்கொலை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்பவர் சாத்தூர் தனியார் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 30 தினங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் உயிர் இழந்தார் . இவரது மனைவி சுபா 55 ஒரு மகன் முரளி பாரதி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

மகள்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் படித்து முடித்து வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் சிதம்பரம் உயிரிழந்த துக்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் மகன்  மிகவும் சோகத்தில் இருந்த நிலையில்

சுபா மற்றும் மகன் முரளி பாரதி  கணவரின்  30வது நாள்  நினைவு தினத்தை  அனுசரித்துவிட்டு துக்கம் தாங்க முடியாமல் இருவரும் விஷம் அறிந்து தற்கொலை செய்து கொண்டனர் அக்கம்பக்கத்தினர் கதவு திறந்து நிலையில் இருவரும் வீழ்ந்து கிடந்ததை கண்டு சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தாய் மகன் இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித் தனியே  கடிதம்  எழுதிய கடிதத்தை கைப்பற்றி உள்ளனர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தாய் மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top