மாணவி பிரியா மரணம்: டிச.6-ம் தேதி மருத்துவர்களிடம் விசாரணை!!

கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்களிடம் டிச.6-ம் தேதி போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மரணம் அடைந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக பல்வேறு நபர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக மருத்துவர்கள் பால் ராம் சங்கர் மற்றும் சோமசுந்தர் ஆகியோர் தலைமறைவானதால் மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பட்டது.

அதே சமயம் கொளத்தூர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர். அதே போல் விசாரணைக்கு மருத்துவர்கள் ஆஜராகாமல் இருக்கும் சூழலில் வருகின்ற டிசம்பர் 6 தேதி அவர்களிடம் எந்த மாதிரியான கேள்விகள் கேட்பது குறித்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், மருத்துவர்களின் நலம் கருதி விசாரணையானது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவியின் மரணம் என்பது மருத்துவர்களின் அலட்சியத்தின் காரணமாகவா? என்பது குறித்து விசாரணை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.