Connect with us

மகாராணி எலிசபெத் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

எலிசபெத்

செய்திகள்

மகாராணி எலிசபெத் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்து விட்டதாக இந்திய குடியரசு தலைவர் திரெளபது முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொதுவாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரிகத்தையும் கடைப்பிடித்து வந்த ராணி எலிசபெத் மறைவு தமக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு மிகுந்த அர்ப்பணிப்புடனும் கண்ணியத்துடனும் சேவை செய்தவர் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதே போல் காராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய கண்ணியம், நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் நீண்ட காலம் நினைவுக்கூரப்படுவார் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

மேலும், எலிசபெத்தின் அன்பையும், கனிவையும் ஒருபோதும் மறவேன் என்றும் தனிப்பட்ட முறையில் தனக்கு ஊக்கமாக இருந்தவர் என்று பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top