Connect with us

புது மாப்பிள்ளை திடீர் மரணம்: தூத்துக்குடியில் பரபரப்பு!!!

death 1

தமிழகம்

புது மாப்பிள்ளை திடீர் மரணம்: தூத்துக்குடியில் பரபரப்பு!!!

துத்துக்குடி நித்தியாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிகிறது.

இதற்காக வீட்டில் பந்தல் அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை வெளியில் செல்வதாக இருந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். ஆனால் அவரின் வாகனம் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது. இருப்பனும், அவர் எப்படி உயிரிழந்தார்? என்பது குறித்து பெற்றோர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இதன் காரணமாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top