தனியார் மருந்தகம் ஒன்றில் கருக்கலைப்பு செய்த கொண்ட பெண் ஒருவர் ரத்தப் போக்கு காரணமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே உள்ள மேட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் – அனித்தா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக அனிதா கருத்தரித்தார்.
இந்நிலையில் குழந்தையின் பாலினம் குறித்து அறிய கடலூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருந்தகத்தில் இந்த தம்பதியினர் நாடிய நிலையில் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அதே மருந்தகத்தில் அனிதாவிற்கு கருக்கலைப்பு நடந்துள்ளது. ரத்தப் போக்கு அதிகரித்து மயங்கிய அப்பெண் ஒரு நாள் முழுவதும் அதே நிலையில் இருந்துள்ளார்.
பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கருக்கலைப்பு செய்த மருந்துக உரிமையாளர் தலைமறைவானதால் காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.