கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி உயிரிழப்பு! நடந்தது என்ன? தெளிவான விளக்கம்;

தற்போது தமிழகத்தில் அதிக அளவு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது. அதுவும் குறிப்பாக பள்ளி மாணவிகள் மத்தியில் தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகளும் அதனால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்படுகிறது.

சிறுமி கடத்தல் தொடர்பாக 8 பேர் கைதாகியுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டியில் சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் 8 பேர் கைதாகியுள்ளனர். சிறுமியை கடத்தியதாக நாகூர் ஹனிபா அவரது தாய்  உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் சிறுமி காதலுடன் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. காதலன் நாகூர் ஹனிபா சிறுமியை ஈரோட்டுக்கு அழைத்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

போலீஸ் தேடுவதை அறிந்த நாகூர் ஹனிபா அவரது காதலியான சிறுமி இருவரும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தனர். உடல்நிலை பாதித்த சிறுமியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு நாகூர் ஹனிபாவின் பெற்றோர் தப்பியோடினர்.

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலூர் சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக கூறப்படும் புகாருக்கு மதுரை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

சிறுமியை நாகூர் ஹனிபா என்பவர் கடத்தி சென்றதாக பெற்றோர் அளித்த புகாரின் ஹனிபா உள்பட 8 பேர் கைதாகியுள்ளனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சில இந்து அமைப்பினர் தவறான தகவலை பரப்புவதாக மதுரை போலீசார் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

போக்சோ வழக்கு பதிவாகி உள்ளதால் சிறுமியின் படத்தையோ பெயரையோ வெளியிடக்கூடாது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment