
Tamil Nadu
தவறான அறுவை சிகிச்சையில் மரணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!!
சென்னை போரூரில் உள்ள சமுதாய நல மருத்துவ மனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாங்காடு அடுத்த முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சதீஸ் குமார் – வினோதினி தம்பதியினருக்கு 5 மற்றும் 3 வயதில் ஆண் பெண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக போரூரில் உள்ள பெரு நகர்மாநகராட்சி சமூதாய நல மருத்துவ மனையில் வினோதியினை சேர்த்துள்ளனர்.
அங்கு கருத்தடை சிகிச்சை நடத்த நிலையில் இருநாட்களுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இருப்பினும் அவருக்கு மீண்டும் வயிறுவலி ஏற்பட்டது. இந்த சூழலில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அவருடைய குடும்பத்தினர் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது குற்றம்சாட்டிய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக பெருநகர் மாநகராட்சியின் கீழ் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
