திருமயம் மஞ்சுவிரட்டு போட்டியில் பார்வையாளர் காளை முட்டி உயிரிழப்பு!!

தமிழகத்தின் பல இடங்களில் இன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டியானது சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதிலும் மிகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர்கள், நடிகர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இணையான மற்றுமொரு வீர விளையாட்டுப் போட்டி தான் மஞ்சுவிரட்டு. இது மஞ்சுவிரட்டு காளையை விரட்டி காளையர்கள் பிடிப்பார்கள். பொதுவாக தமிழர்களின் வீர விளையாட்டு என்பது அவர்களுக்கு மட்டுமன்றி பார்வையாளர்களுக்கும் ஒரு சில நேரங்களில் காயங்களை ஏற்படுத்தும்.

அந்த வகையில் திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே. ராயவரத்தில் மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காளை முட்டியதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த புதுவயல் கிராமத்தில் உள்ள பார்வையாளர் கணேசன் என்று 58 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார். மேலும் மஞ்சுவிரட்டு போட்டியில் இதுவரை மொத்தமாக 25 பேர் காயம் அடைந்த நிலையில் எட்டு பேர் அதில் படுகாயம் அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.