உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ், நிலமோசடி செய்த முன்னாள் மனைவி

உயிருடன் இருக்கும் நபருக்கு இறப்புச் சான்று மற்றும் வாரிசு சான்று வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டனூரை சேர்ந்த சந்திரசேகர் என்பவர்  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு …

தனது மனைவியே இறப்புச் சான்று வாரிசு சான்று வாங்கி நிலமோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாருக்கு  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் கலாமந்திரம் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் பலசரக்கு கடை வைத்திருக்கும் இவர் தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார் கடந்த 08.09 2005இல் காரைக்குடியைச் சேர்ந்த மணிராஜ் என்பவரின்  மகள் நதியாஸ்ரீ  என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது ரித்தேஷ் என்ற மகனும் தேஜஸ்வி என்ற மகளும் உள்ளனர் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உயர்நீதிமன்ற குடும்ப நல நீதிமன்றத்தில் நவம்பர் மாசம் 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்

இந்நிலையில் கண்டனூரில் உள்ள சந்திரசேகர் தனக்கு சொந்தமான மனை இடத்தை தொழில் அபிவிருத்திக்காக விற்பனை செய்ய ஏற்பாடு செய்த பொழுது ஏற்கனவே இந்த இடம் அவரது மனைவி நதியாஸ்ரீ விற்று விட்டதாக தகவல் அறிந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்த பொழுது 24 .11 .2015 அன்றே  சந்திரசேகர் இறந்து விட்டதாகவும் அதற்கு நதியாஸ்ரீ தான்  வாரிசாக சான்றிதழ் பெற்று பத்திரப்பதிவு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்

உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்று வாரிசு சான்று வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளதை அறிந்த பத்திரபதிவு  அலுவலர் உடனடியாக அந்த பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக சந்திரசேகர் மனைவி நதியாஸ்ரீ மீது கடந்த மே 22ல்  சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளரிடம்   நிலஅபகரிப்பு  புகார் அளிக்கப்பட்டு  அந்த புகாருக்கு மாவட்ட  காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

தான் உயிரோடு இருக்கும் பொழுதே இறப்புச் சான்றிதழ்களும் தானும் தன் தாய் தந்தையும் உயிரோடு இருக்கும்போதே வாரிசு சான்றிதழும் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் அளித்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் சந்திரசேகர் கேட்டுக்கொண்டதோடு  அது தொடர்பான ஆவணங்களோடு புகார் மனுவும் அளித்தார்.

உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment