2019-ஆம் ஆண்டு உலகில் முதல் முறையாக கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரே ஒரு நாட்டில் மட்டும் இதுவரை கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இது அனைத்து நாடுகளுக்கும் ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கியது.
அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக வட கொரியா நாட்டில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு பதிவாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மட்டும் திடீரென்று ஒருவருக்கு கொரோனாவின் பாதிப்பு தான் கண்டறியப்பட்டது.
இதன் விளைவாக வடகொரிய நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அதிபர் அறிவித்தார். மேலும் அதுமட்டுமில்லாமல் நேற்றைய தினம் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் வரை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர்.
இந்த நிலை காய்ச்சல் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. கொரோனா தொடங்கியுள்ள வட கொரியா நாட்டில் காய்ச்சலுக்கு மேலும் 21 பேர் உயிரிழந்தனர். ஏற்கனவே கொரோனா உள்பட காய்ச்சல் காரணமாக 6 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.