புரோட்டா சாப்பிட்டு தூங்கியதால் வந்த வினை; அதிகாலையில் மரணம்!

தற்போது நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு துறையினர் பல ஹோட்டல்களில் ஆய்வு செய்து வருகின்றனர். ஏனென்றால் பல ஹோட்டல்களில் தரமற்ற உணவுகள், கெட்டுப்போன மற்றும் கலப்படமான உணவுகள் அதிகம் விற்கப்படுகிறது.

இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் தற்போது தீவிரமாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். ஹோட்டலில் சாப்பிடுவார்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

புரோட்டா அதன் தொடர்ச்சியாக தற்போது பரோட்டா சாப்பிட்டு தூங்கிய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். சென்னை கொளத்தூரில் நடந்து உள்ளது.

சென்னை கொளத்தூரில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கிய 17 வயது சிறுவன் சிபி சங்கமித்திரன் உயிரிழந்துள்ளார்.சிபி சங்கமித்திரன் புரோட்டா சாப்பிட்டு வீட்டிற்கு வந்து தூங்கினார்.

அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று சிபி சங்கமித்திரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சிபி சங்கமித்திர இறப்பு குறித்து கொளத்தூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிபி சங்கமித்திரன் உடல் வைக்கப்பட்டுள்ளது. நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக சிறுவர்கள் இதுபோன்று இறப்பது நடைபெறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment